மாற்றும் என்னை உந்தன் சாயலாய் ஊற்றும் உந்தன் ஆவியை என்னில்
மாற்றும் என்னை உந்தன் சாயலாய்
ஊற்றும் உந்தன் ஆவியை என்னில்
சாற்றுவேன் உந்தன் நாமத்தை என்றும்
நேற்றும் இன்றும் மாறா இயேசுவையே
யாக்கோபை இஸ்ரவேலாய் மாற்றினவர்
சவுலை பவுலாய் மாற்றினீரே
எந்தன் பாவச் செயல் நினையாமல்
என்னை நேசித்த உந்தன் அன்பு - மாற்றும்
சுத்த இதயத்தை என்னில் சிருஷ்டியும்
நிலைவர ஆவியை என்னில் தந்திடும்
இரட்சணிய சந்தோஷத்தை திரும்ப தாரும்
உற்சாக ஆவி என்னை தாங்க செய்திடும் - மாற்றும்
தண்ணீரை ரசமாக மாற்றினீரே
தாழ்ந்தவனை நீர் உயர்த்தினீரே
தற்பரா உந்தன் பொற் பாதத்தை நான்
தாழ்ந்து பணிந்து வருகின்றேன் - மாற்றும்
கல்வாரி சிலுவையின் தேவ அன்பு
கல்லான என்னுள்ளத்தை மாற்றினீரே
தூரமாய் இருந்த என்னைத் தம் கரத்தால்
தூக்க ி அணைத்த தேவ அன்பு - மாற்றும்