Skip to main content

அதிசயமான ஒளி மய நாடாம் என் இயேசுவின் நாடாம்


அதிசயமான ஒளி மய நாடாம்
என் இயேசுவின் நாடாம்
நான் வாஞ்சிக்கும் நாடாம்

பாவம் இல்லாத நாடு - ஒரு
சாபமும் காணா நாடு (2)
நித்திய மகிழ்ச்சி ஓயாத கீதம்
உன்னதத்தில் ஓசன்னா - அல்லேலூயா - அதி

சந்திர சூரியன் இல்லை - ஆனால்
இருள் ஏதும் காணவில்லை (2)
தேவகுமாரன் ஜோதியில் ஜோதி
நித்திய வெளிச்சமவர் - என்றும் பகல் - அதி

வித விதக் கொள்கை இல்லை - பல
பிரிவுள்ள பலகை இல்லை (2)
ஒரே ஒரு குடும்பம் ஒரே ஒரு தலைவர்
எங்குமே அன்புமயம் - அன்புள்ளோர் செல்லும் - அதி

பிரச்சனை ஏதும் இல்லை வீண்
குழப்பங்கள் ஒன்றுமில்லை (2)
மொழி நிறம் ஜாதி பற்று உடையோர்
எவருமே அங்கு இல்லை - அன்பே மொழி - அதி

இயேசுவின் இரத்தத்தினால் - பாவம்
கழுவினால் செல்லலாமே (2)
இத்தனை பெரிய சிலாக்கியம் இழப்போர்
இப்பூமியில் எவரும் வேண்டாம் - இன்றே வாரீர் - அதி