Skip to main content

அனாதி தேவன் உன் அடைக்கலமே அவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே


அனாதி தேவன் உன் அடைக்கலமே
அவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே
இந்த தேவன் என்றென்றுமுள்ள
சதா காலமும் நமது தேவன்
மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார்

காருண்யத்தாலே இழுத்துக்கொண்டார்
தூய தேவ அன்பே
இவ்வனாந்தரத்தில் நயங்காட்டி உன்னை
இனிதாய் வருந்தி அழைத்தார்

கானக பாதை காரிருளில்
தூய தேவ ஒளியே
அழுகை நிறைந்த பள்ளத்தாக்குகளை
அரும் நீருற்றாய் மாற்றினாரே

கிருபை கூர்ந்து மனதுருகும்
தூய தேவ அன்பே
உன் சமாதானத்தின் உடன்படிக்கைகளை
உண்மையாய் கர்த்தர் காத்துக் கொள்வார்

இப்புவியாத்ரை கடந்திடுவாய்
தூய தேவ தயவால்
கடும் கானகத்தில் கர்த்தர் மார்பினிலே
கிடைக்கும் இளைப்பாறுதலே

வறண்ட வாழ்க்கை செழித்திடுதே
தூய தேவ அருளால்
நித்திய மகிழ்ச்சி தலைமேல் இருக்கும்
சஞ்சலம் தவிப்பும் ஒடிப்போம்

ஆனந்தம் பாடி திரும்பியே வா
தூய தேவ பெலத்தால்
சீயோன் பர்வதம் உன்னைச் சேர்த்திடுவார்
சந்ததம் மகிழ்ச்சி அடைவாய்