Skip to main content

அன்பு நேசரே அதிகாலையில் உம் திருமுகம் தேடி அர்ப்பணித்தேன் என்னையே


அன்பு நேசரே அதிகாலையில் உம் திருமுகம் தேடி
அர்ப்பணித்தேன் என்னையே
ஆராதனை துதி ஸ்தோத்திரங்கள்
அப்பனே உமக்கு தந்தேன் - அன்பு நேசரே

இந்த நாளின் ஒவ்வொரு நிமிடமும்
உந்தன் நினைவால் நிரம்ப வேண்டும் (2)
என் வாயின் வார்த்தை எல்லாம்
பிறர் காயம் ஆற்ற வேண்டும் (2) - ஆராதனை

உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம்
என் இதயத் துடிப்பாக மாற்றும் (2)
என் ஜீவ நாட்கள் எல்லாம்
ஜெப வீரர் என்று எழுதும் (2) - ஆராதனை

சுவிசேஷ பாரம் ஒன்றே
என் சுமையாக மாற வேண்டும் (2)
என் தேச எல்லையெங்கும்
உம் நாமம் சொல்ல வேண்டும் (2) - ஆராதனை

உமக்குகந்த தூய பலியாய்
இந்த உடலை ஒப்புக் கொடுத்தேன் (2)
ஆட்கொண்டு என்னை நடத்தும்
அபிஷேகத்தாலே நிரப்பும் (2) - ஆராதனை