Skip to main content

அபிஷேகம் வந்திறங்குதே ஆவிக்குள் அகமகிழவே - 2


அபிஷேகம் வந்திறங்குதே
ஆவிக்குள் அகமகிழவே - 2
ஆவியால் நிறைந்திடும் போது
தரிசனம் தோன்றிடுதே - 2
ஆவியின் மாமழை பொழியுதே
மாம்சமானோர் யாவர் மீதும் - 2

ஆவிக்குள்ளே ஜீவிப்பதே
ஜெயம் பெறும் வாழ்வாகுமே
மாம்சம் உலகத்தை முற்றும்
மேற்கொள்ளும் ஜீவியமே - ஆவியின்

ஆவியின் பெலத்தால் நிறைந்தே
கோலியாத்தை வீழ்த்தினானே
தாவீதைப் போல் அபிஷேகத்தால்
என்றென்றும் நிறைந்திருப்போம் - ஆவியின்

அபிஷேகம் இழந்திடாதே
சிம்சோன் சவுலைப் போல
உந்தன் வாலிப ஜீவியத்தில்
எச்சரிக்கையுடன் வாழ்ந்திடு - ஆவியின்

ஆவிக்குள் ஜீவித்திடு
ஆவியில் அனலாயிரு
ஆண்டவர் இயேச அளிக்கும்
பரலோக பாக்கியமே - ஆவியின்