Skip to main content

அர்பணித்தேன் என்னை முற்றிலுமாய் அற்புத நாதா உம் கரத்தில்


அர்பணித்தேன் என்னை முற்றிலுமாய்
அற்புத நாதா உம் கரத்தில்
அனைத்தும் உமக்கே சொந்தம் என்று
அன்பரே என்னையே தத்தம் செய்தேன்
பல்லவி
அனைத்தும் கிறிÞதுவுக்கே எந்தன்
அனைத்தும் அர்ப்பணமே
எம்முழுத் தன்மைகள் ஆவல்களும்
அனைத்தும் கிறிÞதுவுக்கே

என் எண்ணம் போல நான் அலைந்தேனே
என்னைத் தடுத்திட்ட தாருமில்லை
உம் சிலுவை அன்பை சந்தித்தேன்
நொறுங்கி வீழ்ந்தேனே உம் பாதத்தில் - அனைத்தும்

ஐம்புலன்கன் யாவும் அடங்கிட
ஐம்பெருங் காயங்கள் ஏற்ற நாதா
வான் புவிக் கிரகங்கள் ஆள்பவரே
என்னையும் ஆண்டிட நீரே வல்லோர் - அனைத்தும்

என் வாழ்வில் அழந்த நன்னைக்கீடாய்
எஞ்சிய நாட்களில் உழைப்பேனே
நீர் தந்த ஈவு வரங்கள் யாவும்
உம்பணி சிறந்திட முற்றும் தந்தேன் - அனைத்தும்