Skip to main content

அற்புத அன்பிதே பொற்பரன் இயேசுவே பெற்ற பிதாவிலும் உற்றவர் எனக்கே


அற்புத அன்பிதே பொற்பரன் இயேசுவே
பெற்ற பிதாவிலும் உற்றவர் எனக்கே
உம்மைப் போற்றி ஏற்றி புகழ்ந்திடவே
துதி சாற்றி ஊற்றி உள்ளம் மகிழுவேன் - 2
ஆன்பு பெருகும் சுனை நீரல்லவோ
அம்பு விதனில் அரசே
மாறா நின் தயவும் மா நேசமதும் மறப்பேனா -2

நாலாம் ஜாமத்தில் நடுக்கடல் மீதே
நடந்து சீஷரைத் தேற்றிய ஏசுவே
எந்தன் நாவாய்ப் பொங்கும் அலைகடந்தே
கரை நாடி சேரத் துணை புரிவீர்

மெல்கிசேதேக்கினைப் போன்ற குமாரனே
நல்குவீர் தாழ்மையும் நின்சித்தம் செய்யவே
தாரும் தூய ஆவி அனுக்கிரகமே - இன்று
மீயுமென்னில் புது பெலனே - அன்பு

ஒளியில் இலங்கும் சுத்தர்களுடனே
எளியோன் எனக்கோர் பங்களித்தவரே
பரிசுத்தம் நான் பெறச் செய்யுமே
சுதந்திரம் நான் பெறச் செய்யுமே - அன்பு

சீயோனின் சிறப்பே அன்பின் பூரணமே
சிந்திக்க ஆனந்த கண்ணீர் பெருகுதே
அதை எண்ணி நிறைந்தன்பினால்
இன்றும் எண்ணமில்லா துதி சொல்லுவேன் - அன்பு