நரகை ஜெயித்தெழுந்தார் யூதராஜ சிங்கம் உயிhத்தெழுந்தார் - உயிர்த்தெழுந்தார்
யூதராஜ சிங்கம் உயிhத்தெழுந்தார் - உயிர்த்தெழுந்தார்
நரகை ஜெயித்தெழுந்தார்
வேதாளக் கணங்கள் ஓடிடவே -
ஓடிடவே உருகி வாடிடவே - யூத
வானத்தின் சேனைகள் துதித்திடவே -
துதித்திடவே பரனைத் துதித்திடவே - யூத
மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்டன -
தெறிபட்டன நொடியில் முறிபட்டன - யூத
எழுந்தார் என்ற தொனி எங்கும் கேட்குதே -
எங்கும் கேட்குதே பயத்தை என்றும் நீக்குதே - யூத
மாதர் தூதரைக் கண்டகமகிழ்ந்தார் -
அகமகிழ்ந்தார் பரனை அவர் புகழ்ந்தார் - யூத
பாவத்திற்கென்று ஒரே தரம் மரித்தார் -
ஒரேதரம் மரித்தார் ஒரே தரம் மரித்தார் - யூத
மரித்த கிறிஸ்து இனி மரிப்பதில்லை -
மரிப்பதில்லை இனி மரிப்பதில்லை - யூத
கிறிஸ்தோரே நாமவர் பாதம் பணிவோம் -
பாதம் பணிவோம் பதத்தைச் சிரமணிவோம் - யூத