நல்மேய்ப்பன் இவரே - இயேசு நல்மேய்ப்பன் இவரே
நல்மேய்ப்பன் இவரே
சொல்லொண்ணா அன்பினால்
தன்னுயிர் ஈந்த நல்மேய்ப்பன் இவரே
ஆடுகள் பெயரினை ஆயனே அறிவார்
அழியாமை ஜீவன் அளித்திட வந்தார்
ஆடுகள் முன்னே செல்லுகின்றார்
அவரின் பின்னே சென்றிடுவோம் - நல்மேய்ப்பன்
கள்வர் மந்தையை வாடிடும்போதும்
கயவரின் வஞ்சக வலை வீசும் போதும்
பிள்ளையைப் போல தோள்களிலே
கள்ளமில்லா துயில் கொண்டிடுமே - நல்மேய்ப்பன்
மேய்ப்பனின் குரலை அறிந்திடும் மந்தை
மேய்ப்பனின் சித்தம் செய்திடும் ஆடுகள்
குரலொலி கேட்டு தேடிடுமே
குயவனின் கையில் அடங்கிடுமே - நல்மேய்ப்பன்
இயேசுவே வாசல் இயேசுவே வழியாம்
அவர் வழி சென்றால் மேய்ச்சலைக் காண்பாய்
ஆண்டவன் இணைத்த மந்தையிலே
அநுதினம் நீயும் செயல்படுவாய் - நல்மேய்ப்பன்
பெரிய மேய்ப்பர் வெளிப்படும்போது
வெகுமதி யாவும் அளித்திடுவாரே
நீதியும் பரிசுத்தம் காத்திடுவோம்
புனிதரின் இராஜ்ஜியம் சேர்ந்திடுவோம்
நல்மேய்ப்பன்