Skip to main content

நானும் என் வீட்டாருமோ வென்றால் கர்த்தரையே சேவிப்போம்


நானும் என் வீட்டாருமோ வென்றால்
கர்த்தரையே சேவிப்போம்
நீயும் சேவிப்பாயா? ஶி நீயும் சேவிப்பாயா?

கர்த்தரையே சேவிப்பது
ஆகாததென்று கண்டால்
யாரை நீ சேவிப்பாயென்பதை
இன்றே தீர்மானம் செய்வாய் - நானும்

அடிமையான நம்மையுமே
தேவாதி தேவன் மீட்டார்
மாபெரும் அடையாளங்கள் செய்திட்ட
கர்த்தரை சேவிப்பாயா? - நானும்

நம்பாதையில் காப்பாறியே
கர்த்தர் நடத்தினாரே
கர்த்தர் தந்த ஆசீர் யாவும் கண்டு
நன்றியாய் சேவிப்பாயா? - நானும்

நன்மையான ஈவுகளை
தேவாதி தேவன் தந்தார்
கீழ்ப்படிந்தே அவர் சத்தம் கேட்டு
சாட்சியாய் ஜீவிப்பாயா? - நானும்