உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா! ஜெயித்தெழுந்தாரே
ஜெயித்தெழுந்தாரே
உயிருடன் எழுந்த மீட்பர் இயேசென்
சொந்த மானாரே
கல்லறைத் திறந்திடவே
கடும் சேவகர் பயந்திடவே
வல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரே
வல்லப் பிதாவின் செயலிதுவே - உயிர்த்
மரித்தவர் மத்தியிலே
ஜீவ தேவனைத் தேடுவாரோ
நீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரே
நித்திய நம்பிக்கை பெகிடுதே - உயிர்த்
எம்மா ஊர் சீஷர்களின்
எல்லா மன இருள் நீக்கினாரே
எம்மனக் கலக்கங்கள் நீக்கினதாலே
எல்லையில்லாப் பரமானந்தமே - உயிர்த்
மரணமுன் கூர் எங்கே
பாதாள முன் ஜெயமெங்கே
சாவையும் நோயையும் பேயையும் ஜெயித்தார்
சபையோரே துதி சாற்றிடுவோம் - உயிர்த்
ஆவியால் இன்றும் என்றும்
ஆ! எம்மையும் உயிர்ப்பிக்கவே
ஆவியின் அச்சாரம் எமக்களித்தாரே
அல்லேலூயா துதி சாற்றிடுவோம் - உயிர்த்
பரிசுத்தமாகுதலை
பயத்தோடென்றும் காத்துக் கொள்வோம்
எக்காளம் தொனிக்கையில் மறுரூபமாக
எழும்புவோமே மகிமையிலே - உயிர்த்