உலகின் ஒளியே இயேசுவே அகிலம் போற்றும் தெய்வமாய்
அகிலம் போற்றும் தெய்வமாய்
அன்பின் தெய்வம் வேறு இல்லை
அவரை அண்டியே சேர்ந்திடுவாய்
இயேசு நல்லவரே
இயேசு வல்லவரே
மனதின் இருளை நீக்கிடுவார்
உள்ளம் திறந்தே ஏற்பாய்
பாவம் போக்க வந்தார்
சாபம் யாவும் நீக்குவார்
இவரை அல்லால் வழியும் இல்லை
அகத்தில் இவரை ஏற்றிடுவாய் - இயேசு
பயங்கள் யாவும் அகற்றிடவே
பரிவாய் வந்தார் உலகினிலே
சாவை ஜெயித்தார் ரோகம் தொலைத்தார்
உந்தன் நாயகனாம் இவரை - இயேசு
தேவ மைந்தனாய் வந்தவர்
மாளும் மாந்தரை மீட்கவே
கருணை தேவன் அன்பின் தெய்வம்
எந்தன் நாயகனாம் இவரே - இயேசு