உம் இரத்தமே உம் இரத்தமே சுத்தம் செய்யுமே உம் இரத்தமே என் பானமே
உம் இரத்தமே என் பானமே
பாய்ந்து வந்த நின் ரத்தமே
சாய்ந்தோர்க்கு அடைக்கலமே
பாவிகள் நேசர் பாவி என்னை
கூவிக் கழுவினீர் என்னை - உம்
நேசச் சிலுவை சத்தியம்
நாசம் அடைவோர்க்கு பைத்தியம்
இரட்சிப்படைவோர் சத்தியம்
நிச்சயம் காப்பார் நித்தியம் - உம்
நின் சிலுவையில் சிந்திய
வன்மையுள்ள இரத்தத்தினால்
என் பாவத்தை பரிகரித்தீர்
அன்புள்ள தேவ புத்திரா - உம்
பன்றி போல் சேற்றில் புரண்டேன்
நன்றி இல்லாமல் திரிந்தேன்
கரத்தால் அரவணைத்தீர்
வரத்தால் ஆசீர்வதித்தீர் - உம்
விழுங்கப் பார்க்கும் சாத்தானை
மழுங்க வைத்தீர் அவனை
புழங்காமல் போக்கினானே
களங்கமில்லா கர்த்தனே - உம்
ஐயனே உமக்கு மகிமையும்
துய்யனே துதி கனமும்
மெய்யனே எல்லா வல்லமையும்
உய்யோனே உமக்கல்லேலூயா - உம்