Skip to main content

உத்தமமாய் முன் செல்ல உதவி செய்யும் யெகோவா ஊக்கமதைக் கைவிடாமல் காத்துக்கொள்ள உதவும் - 2


உத்தமமாய் முன் செல்ல உதவி செய்யும் யெகோவா
ஊக்கமதைக் கைவிடாமல் காத்துக்கொள்ள உதவும் - 2

பல விதமாம் சோதனைகள் உலகத்தில் எமை வருத்தும்
சாத்தானின் அக்கினி யாஸ்திரங்கள் எண்ணா நேரத்தில் தாக்கும் - 2

தீர்மானங்கள் தோற்கா வண்ணம் காத்துக்கொள்ள உதவும்
நேர்மையாக வாக்கைக் காக்க வழி வகுத்தருள வேண்டும் - 2

இவ்வுலக மாயாபுரி அழியப் போவது நிச்சயம்
இரட்சகனே நீர் இராஜாவாக வருவது அதிநிச்சயம் - 2

தூதரோடு பாடலோடு பரலோகில் நான் உலாவ
கிருபை செய்யும் இயேசு தேவா உண்மை வழிகாட்டியே - 2