உன்னத தேவன் உன்னை அழைக்கிறார் நம்பியே வந்திடுவாய்
நம்பியே வந்திடுவாய்
அனுபல்லவி
சிலுவை சுமந்தே உனக்காய் அவர் மரித்தாரே
பாவத்தில் அழியாதே
தேவனை மறவாதே
இருதயத்தை தட்டுகிறார்
இன்றதை திறந்தளிப்பாய் - உன்
இன்று உன் ஜீவன் போனால்
எங்கு நீ சென்றிடுவாய்
இந்த வேளை சிந்தனை செய்
இயேசுன்னை அழைக்கிறாரே - உன்
நரகத்தின் பாதையிலும்
மரணத்தின் வழிகளிலும்
உல்லாசமாய் நடப்பது ஏன்
உண்மையாய் அழிந்திடுவாய் - உன்
தம்மிடம் வருபவரைத்
தள்ளிடவே மாட்டார்
அன்புகரம் விரித்தவராய்
ஆண்டவர் அழைக்கிறாரே - உன்