Skip to main content

உன்னத வீட்டை சீக்கிரம் சென்று அன்பரை சேர்ந்திடுவோம்


உன்னத வீட்டை சீக்கிரம் சென்று அன்பரை
சேர்ந்திடுவோம்
இயேசு இரட்சகர் ஏழையின் வாஞ்சை யாவையும்
(தீர்த்துவிட்டார்)

தூதரின் மத்தியில் மகிழ் கொண்டாடிட தேவனை
போற்றிடுவேன்
கமழ் வாசனை வீசும் பூக்களின் மத்தியில் இன்பமாய்
அயர்ந்திடுவேன்

வானோர்கள் பற்பல ஊழியஞ் செய்ய ஏழையும் சேர்ந்து
கொள்வேன்
என் இயேசுவின் துதியை நாவினால் பாடி நேசரால்
அகமகிழ்வேன்

பளிங்கு நதியின் ஓரங்களில் நான் ஓடியுலாவிடுவேன்
பொன் வீதியில் நானும் அன்பருடனே கவியுடன்
அடியெடுப்பேன்

பறவைகளனேகம் விருட்சங்களதிகம் தானுமங்கே உண்டு
பராபரன் தாமே எக்காகச் சேர்த்த பொருள்களும்
மெத்தவுண்டு

பேதுரு யோவான் பவுலும் கூட அங்கே ஓய்ந்திருப்பார்
என் நேசரின் வீட்டில் மகாபெருமின்பம் ஆ ஆ ஆனந்தமே