உந்தன் தழும்புகள் என் ஆரோக்கியம் உந்தன் சிலுவை எந்தன் மேன்மை
உந்தன் சிலுவை எந்தன் மேன்மை
எந்தன் வாஞ்சை எல்லாம் தீர்க்கும்
எந்தன் பாதை செவ்வையாக்கும்
உந்தன் பாடுகள் என் ஆறுதல்
உந்தன் நாமம் எந்தன் துருகம்
உந்தன் அன்பு என்னுள் பாயும்
கரை புரண்டு பொங்கி ஓடும்
உந்தன் பாதம் எந்தன் வாஞ்சை
உந்தன் கரங்கள் எந்தன் தஞ்சம்
உம்மைத் தேடும் எந்தன் ஆத்மா
உம் சமூகம் நித்தம் நாடும்
உந்தன் மாம்சம் எந்தன் போஜனம்
உந்தன் இரத்தம் எந்தன் பானம்
உந்தன் சித்தம் எந்தன் பாக்யம்
உந்தன் கிருபை மட்டும் போதும்