Skip to main content

உம்மை நோக்கி பார்க்கின்றேன் உம்மை நினைத்து துதிக்கின்றேன்


உம்மை நோக்கி பார்க்கின்றேன்
உம்மை நினைத்து துதிக்கின்றேன்
இயேசப்பா ஸ்தோத்திரம் - 6

நீரே என் செல்வம்
ஒப்பற்ற என் செல்வம்
உம்மில் மகிழ்கின்றேன் - நான்
என்னை மறக்கின்றேன் - உம்மை

கண்ணின் மணிபோல
என்னைக் காக்கின்றீர்
உமது நிழலிலே - நான்
என்னை மறக்கின்றேன் - உம்மை

வாழ்வின் பாதையை
எனக்குக் காட்டுவீர்
உமது சமூகமே - தினம்
எனக்குத் தீபமே - உம்மை

உலகம் வெறுக்கையில்
நீரோ அணைக்கின்றீர்
உமது அணைப்பிலே அந்த
வெறுப்பை மறக்கின்றேன் - உம்மை