Skip to main content

உம்மைப் போல் நல் நேசருண்டோ உன்னதர் நீர் அல்லவோ


உம்மைப் போல் நல் நேசருண்டோ
உன்னதர் நீர் அல்லவோ
கர்த்தரின் அன்பை நினைக்கும்போது
எந்தன் கவலைகள் மாறிடுதே - 2

கல்வாரி சிலுவை நோக்கிடும் போது
கல்மனம் கலங்கிடுதே
பரிசுத்தர் போற்றும் பரம ராஜன் என்
பாவங்கள் நீக்கினாரே - உம்

நான் ஒரு கழுதை நீரோ என் தேவன்
நான் உம தடிமையல்லோ
வழி நடத்தும் என் அருமை
வாழ்வெல்லாம் வாழ்த்திடுவேன் - உம்

நேசரின் அன்பை அறிந்திடும்போது
நெஞ்சம் மகிழ்ந்திடுதே
இதயத்தை நோக்கும் இயேசு ராஜனை
என்றென்றும் துதித்திடுவேன் - உம்

என் இயேசு ராஜன் வருகையின் போது
எக்காளம் தொனித்திடுதே
நீதியில் நடத்தும் நல்ல மேய்ப்பனை
நிச்சயம் சேர்ந்திடுவேன் - உம்