உமது கிரியை சபையில் வேண்டும் உமது மகிமை ஓங்கிட
உமது மகிமை ஓங்கிட
உமது நாமம் பரவிட
உமது ஜனத்தை உயிர்ப்பியும்
ஆதிசபையில் நடந்த கிரியையும்
அன்பும் விசுவாசம் குறைந்ததே
ஆதி ஒரு மனம் ஐக்கியமில்லை
ஆண்டவர் தான் அதை சகிப்பாரோ - உமது
கடின உள்ளங்கள் உடைந்திடவே
கர்த்தர் உம் வார்த்தை பொழிந்திடுமே
அனுதினம் உம் சபையைக் கட்ட
ஆண்டவர் கிருபை பொழிந்திடுமே - உமது
உம்மையன்றி தேவன் இல்லை
உம்மையன்றி மீட்பு இல்லை
உமது கிரியை சபையில் விளங்க
உமது மகிமை ஈந்திடும் - உமது
பரிசுத்த ஆவி பெற்ற ஜனங்களும்
பரிசுத்தமாக வாழ்ந்திடவே
உமது ஜனமும் உயிரடைய
உமது ஆஜீயால் நிரப்பிடும் - உமது