உந்தன் நாமம் அதிசயமானவரே அதிசயம் காணபண்ணுவீர்
அதிசயம் காணபண்ணுவீர்
என்னை அதிசயம் காணப்பண்ணுவீர்
பாவசாப ரோகத்தோடு உம்மிடம் வந்தேன்
பரிசுத்த ஜாதியாக மாற்றிவிட்டீர்
எத்துணை விந்தை கர்த்தாவே
உந்தன் நாமம் அதிசயமன்றோ
கண்ணீர் கவலை துக்கத்தோடு உம்மிடம் வந்தேன்
பரலோக சந்தோஷம் எனக்கு தந்தீர்
எத்துணை கிருபை கர்த்தாவே
உந்தன் நாமம் அதிசயமன்றோ
கிதியோன்போல கோழையாக உம்மிடம் வந்தேன்
உன்னதத்தின் பெலத்தாலே நிறைத்துவிட்டீர்
எத்துணை வல்லமை கர்த்தாவே
உந்தன் நாமம் அதிசயமன்றோ