உலகத்தோற்றம் முன்னே எம்மை உள்ளத்தில் கண்டு எடுத்தாரே
உள்ளத்தில் கண்டு எடுத்தாரே
உன்னதமா அழைப்பிதே
உண்மையுடன் நாம் சேவிப்போமே
ஆதி அன்பால் உள்ளம் பொங்க
ஆத்தும தாகமே எழும்ப
ஆர்வமுடன் நாம் சேவிப்போமே
தூதர்கள் கூடப் பெற்றிடாத
தூயதாம் பணியும் ஈந்திட்டாரே
பரமனின் தயவிதே
பயத்தோடே நாம் சேவிப்போமே - ஆதி
மேய்ப்பனில்லாத ஆடுகள் போல்
மேய்ப்பனைத்தேடும் மந்தைகள் போல்
தேவஜனம் அலையுதே
தேடி விரைவாய்ச் சேர்ந்திடுவோம் - ஆதி
ஆண்டவரே தம் சம்பத்தையே
ஆவலாய்ச் சேர்ர்க்கும் நாளதிலே
தன் மகனை கடாட்சிக்கும்
தந்தை போல நம்மைக் கண்டெடுப்பார் - ஆதி
வேகம் அறுப்பு பெருகுதே
வேலைக்கோ ஆட்கள் குறையுதே
வேண்டிடுவோம் ஊக்கமுடன்
வேளையிதே நாம் சேவிப்போமே - ஆதி
சேவை தமக்குச் செய்வோருக்கும்
சேவை செய்யாதவர்க்கும் உள்ள
வித்தியாசமே காண்போம் அன்றே
வீரமுடன் நாம் சேவிப்போமே - ஆதி