மறுரூபம் மலைமீதிலே மகிமையைக் கண்ட வாழ்வினிலே
மகிமையைக் கண்ட வாழ்வினிலே
மகா பெலன் வந்திறங்கிடுதே
உன்னத ஜீவன்; புறப்படுதே
உயர் ஸ்தலமதிலே ஏற்றிடுதே
மகிமை மகிமை மா மகிமை விளங்கும்
மலை வாசம் என மனம் மகிழும் - மறுரூபம்
தேவ பர்வத கொடுமுடியில்
தேவ சமூகம் இறங்கிடுதே
அருணோதயம் போல் மேகமும் நிழலிடுதே
அண்ணல் வாக்கங்கு தொனித்திடுதே - மறுரூபம்
கன்மலைத் தேனும் அருந்திடவே
என் ஆவி ஆத்துமா செழித்திடுதே
எனமு வாழ்வை போஷிக்கும் பங்கிதுவே
எங்கள் யாக்கோபின் சுதந்திரமே - மறுரூபம்
அக்கினிக் கோட்டை சூழ்ந்திடுதே
ஆவியின் பெலனே காத்திடுதே
ஜெபமே ஜெயமே தீங்குநாளின் அரணே
உபவாசம் நல் அனுபவமே - மறுரூபம்
ஆச்சரியமான ஆலோசனை
அன்பரின் பாதம் கிடைத்திடுதே
ஜெயமாய் முழங்கும் ஸ்தோத்திர ஆராதனையும்
ஜெயதூபம் அங்கேறெடுப்பேன் - மறுரூபம்
சீயோனில் கர்த்தர் ஏற்றிடுவார்
சீக்கிரம் நம்மைச் சேர்த்திடுவார்
ஓலிவ மலைமேல் அன்றவர் பாதம் நிற்கும்
ஓளியாம் ஏசு வந்திடுவார் - மறுரூபம்