மாமிசமானோர் யாவரின் மேலும் வந்திடும் ஆவியே எந்தனின் மேலும் வல்லமையாக பொழிந்திடவேணுமே
மாமிசமானோர் யாவரின் மேலும் வந்திடும் ஆவியே
எந்தனின் மேலும் வல்லமையாக பொழிந்திடவேணுமே
எந்தனின் பெலமெல்லாம் ஒன்றுமில்லை என்பதை நானறிவேன்
உந்தனின் ஆவியினால் எல்லாம் ஆகும் உன்னத தேவனே
உயிர் மீட்சி தாரும் சபைதனில் தடுவில்
அருள்மாரி பொழிந்திடுமே பின்மாரி ஊற்றிடுமே - மாமிச
பெந்தேகொஸ்தேயின் நாள்தனில் அன் பலமாய் இறங்கினீரே
உந்தனின் ஜனங்கள் எங்களின் மேலே நிழலிட வேணுமே
ஆவியின் வரங்கள் அளவில்லாமல்
அருளிட வேணுமே அபிஷேகம் தாருமே - மாமிச
இந்த வாலிப நாட்களில் உம்மை வாஞ்சித்துக் கதறுகிறேன்
என்றும் மாறா இயேசுவே உம்மை மண்டியிட்டு வேண்டுகிறேன்
உந்தனுக்காக ஊழியம் செய்ய
எந்தனை நிரப்பிட ுமே உன்னத பெலனாரே - மாமிச