உமக்காக தானே ஐயா - நான் உயிர் வாழ்கிறேன் - ஐயா
உயிர் வாழ்கிறேன் - ஐயா
என் உடலும் உள்ளமெல்லாம் - அன்பர்
உமக்காகத்தானே ஐயா
எத்தனை இடர்கள் வந்தாலும்
எதுவும் என்னை அசைப்பதில்லை
மகிழ்வுடன் தொடர்ந்து ஓடுகிறேன்
மன நிறைவோடு பணி செய்வேன் - உமக்காக
கோதுமை மணிபோல் மடிந்திடுவேன்
உமக்காய் தினமும் பலன் கொடுப்பேன்
அவமான நிந்தை சிலுவைகளை
அனுதினமும் நான் சுமக்கின்றேன் - உமக்காக
எனது ஜீவனை மதிக்கவில்லை
ஒரு பொருட்டாய் நான் எண்ணவில்லை
எல்லோருக்கும் நான் எல்லாமானேன்
அனைவருக்கும் நான் அடிமையானேன் - உமக்காக
எனது பேச்செல்லாம் உமக்காக
எனது செயல் எல்லாம் உமக்காக
எழுந்தாலும் நடந்தாலும் உமக்காக
அமர்ந்தாலும் படுத்தாலும் உமக்காக - உமக்காக