உலகின் ஒளியே வாழ்க! உயிர்ப்பிக்கும் தேவனே நீர் வாழ்க!!
உயிர்ப்பிக்கும் தேவனே நீர் வாழ்க!!
பரிசுத்த ஆவியே வாழ்க!!!
பணிந்து போற்றுகிறோம்
சரணங்கள்
மகிமையாய் வெற்றி சிறந்தவரே மாட்சிமை உள்ளவரே
உன்னதரே, உயர்ந்தவரே, உண்மையுள்ளவரே - உலகின்
சிலுவையில் வெற்றி சிறந்தவரே சிலுவையின் நாயகரே
வல்லவரே, நல்லவரே, அன்பு மிகுந்தவரே - உலகின்
ஆதியும் அந்தமும் ஆனவரே அதிசயமானவரே
அன்பரே, நண்பரே, அற்புதமானவரே - உலகின்
சாத்தானின் செயல்களை அழித்தவரே சந்ததம் உள்ளவரே
சத்தியரே, சகாயரே, சாவாமையுள்ளவரே - உலகின்
சீக்கிரம் வருவேன் என்றவரே சீயோனின் அதிபதியே
இனியவரே, பெரியவரே, இரக்கமானவரே - உலகின்