Skip to main content

உலகோர் உன்னைப் பகைத்தாலும் உண்மையாய் அன்பு கூறவாயா


உலகோர் உன்னைப் பகைத்தாலும்
உண்மையாய் அன்பு கூறவாயா
உற்றார் உன்னை வெறுத்தாலும்
உந்தன் சிலுவை சுமப்பாயா? (2)
உனக்காக நான் மரித்தேனே
எனக்காக நீ என்ன செய்தாய்?

உலக மேன்மை அற்பம் என்றும்
உலக ஆஸ்தி குப்பை என்றும்
உள்ளத்தினின்று கூறவாயா
ஊழியம் செய்ய வருவாயா? (2)- உனக்காக

மேய்ப்பன் இல்லாத ஆடுகள் போல்
மேய்கிறார் பாவ புல்வெளியில்
மேய்ப்பன் இயேசுவை அறிந்த நீயும்
மேன்மையை நாடி ஓடுகின்றாயா? (2)- உனக்காக

இயேசு என்றால் என்ன விலை
என்றே கேட்டிடும் எத்தனை பேர்
பிள்ளைகள் அப்பம் கேட்கின்றனர்
ஜீவ அப்பம் கொடுப்பாயா? (2)- உனக்காக

ஐந்து சகோதரர் அழிகின்றாரே
யாரையாவது அனுப்பிடுமே
யாரை நான் அனுப்பிடுவேன்
யார் தான் போவார் எனக்காக (2)- உனக்காக