Skip to main content

உள்ளம் ஆனந்த கீதத்திலே வெள்ளமாகவே பாய்ந்திடுதே


உள்ளம் ஆனந்த கீதத்திலே
வெள்ளமாகவே பாய்ந்திடுதே
எந்தன் ஆத்தும நேசரையே
என்றும் வாழ்த்தியே பாடிடுவேன்

பாவ பாரம் நிறைந்தவனாய்
பல நாட்களாய் நான் அலைந்தேன்
அந்தப் பாரச் சிலுவையிலே
எந்தன் பாரங்கள் சுமந்தவரே - உள்ளம்

மலை போன்றதோர் சோதனையில்
மகிபன் அவர் கைவிடாரே
கல்வாரியின் அன்பினிலே
கனிவோடுன்னை அணைத்திடுவார் - உள்ளம்

உலகம் முடியும் வரைக்கும்
உந்தனோடிருப்பேன் என்றவர்
வாக்கு மாறிடா நேசரையே
நம்பிடுவாய் துணை அவரே - உள்ளம்