ஆசீர்வாதத்தை நாடினோம் பரலோகப் பிதாவே கூடினோம்
பரலோகப் பிதாவே கூடினோம்
அருகரில்லா தவர்களானோம்
திரு சக்தியை எமக்குத் தாரும்
இருதயத்தை காலி செய்தோம் (2)
பரலோகப் பிதாவே கூடினோம் - ஆசீர்
பராக்கிரமமுள்ளவர் நீரே
சராசரங்களை உண்டாக்கினீரே
நேரமெல்லாம் உம்மைத் துதிப்போம் (2)
பரலோகப் பிதாவே கூடினோம் - ஆசீர்
அன்பினால் அவஸ்தைகளை சகித்தீர்
துன்புறுத்தும் பூமியிலிருந்தீர்
தன்னயமற்ற தாசராக்கும் (2)
பரலோகப் பிதாவே கூடினோம் - ஆசீர்