Skip to main content

ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன் ஆசையவ ரென் ஆத்து மாவிற்கே


ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன்
ஆசையவ ரென் ஆத்து மாவிற்கே
ஆசிகளருளும் ஆனந்தனந்தமாய்
ஆண்டவர் இயேசு போல் யாருமில்லையே
இயேசுவல்லால் இயேசுவல்லால்
இன்பம் இகத்தில் வேறு எங்குமில்லையே
இயேசுவல்லால் இயேசுவல்லால்
இன்பம் வேறு எங்குமில்லையே
தந்தை தாயுமுன் சொந்தமானோர்களும்
தள்ளிடினும் நான் தள்ளிடுவேனோ
தாங்கிடுவேனென் நீதியின் கரத்தால்
தாபரமும் நல்ல நாதனுமென்றார் - இயேசு
கிறிஸ்து இயேசு பிரசன்னமாகவே
கிருபையும் வெளியாகினதே
நீக்கியே சாவினை நற்சுவிசேஷத்தால்
ஜீவன் அழியாமை வெளியாக்கினார் - இயேசு
ஒப்பில்லாத நம்பிக்கை சந்தோஷமும்
மகிழ்ச்சியின் கிரீடமாகவே
அப்போஸ்தலர் தம் ஊழியத்தாலே
ஆதி விஸ்வாசத்தில் வளர்ந்திடுவோம் - இயேசு
அழுகையின் தாழ்வில் நடப்பவரே
ஆழிபோல் வான் மழை நிறைக்குமே
சேர்ந்திட பரத்தில் தேவனின் சந்நிதி
ஜெயத்தின் மேல் ஜெயமடைந்திடுவோம் - இயேசு