ஆபத்தில் உந்தன் அரனே இயேசு . . . அலைகடல் வாழ்வில் கன்மலை இயேசு...
அலைகடல் வாழ்வில் கன்மலை இயேசு...
ஆழமாய் நேசிக்கும் அன்பர் உன் இயேசு...
நெஞ்சமே துதித்திடு! உன் சொந்தம் இயேசு
அழுதிட இனிமேல் அவசியமில்லை
துக்கிக்க இன்மேல் காரணம் இல்லை
அழுகையைக் களிப்பாய் மாற்றினார் இயேசு!
நெஞ்சமே துதித்திடு உன் நேசர் இயேசு! - ஆபத்தில்
அன்பிற்கு ஏங்கிட அவசியமில்லை
ஆறுதல் தேடிட அவசியமில்லை
நேசிப்பார் தேற்றுவார் உன் இன்ப இயேசு!
நெஞ்சமே துதித்திடு உன் தெய்வம் இயேசு - ஆபத்தில்
சத்துரு சாபமோ எதுவுமே இல்லை
வியாதியோ வறுமையோ இல்லவே இல்லை
சாபத்தைத் தன் மேல் சுமந்தார் இயேசு
நெஞ்சமே துதித்திடு உன் செல்வம் இயேசு - ஆபத்தில்
தேடிடும் போதெல்லாம் தேற்றிட வருவார்
ஓடியே வந்து உன்னை அணைப்பார்
ஜீவனே போயினும் இயேசுவை நம்பு
நெஞ்சமே துதித்திடு உன் ஜீவன் இயேசு! - ஆபத்தில்