Skip to main content

ஆஹா என்ன இன்பம் பரலோக இன்பம் இன்ப இயேசு அளித்தனரே


ஆஹா என்ன இன்பம் பரலோக இன்பம்
இன்ப இயேசு அளித்தனரே
அளவிற் கடங்கா புத்திக்கும் எட்டிடா
அன்பைக் கூற நாவும் போதுமோ

நீசதுரோகி எந்தனை - பாசமாய் ஏற்றீரோ நீர்
பாவ உளையினின்றே - தூக்கி எடுத்தீரோ நீர் - ஆஹா

நாசபுரி நோக்கியே - விரைந்து சென்ற என்னை
பாசம் வைத்தேன் உந்தனில் என்று கூவி அழைத்தீரே நீர் - ஆஹா

நெரிந்த நாணல் என்னை - முறித்திடும் தருணம்
பரிந்து பேசி அன்பால் - நிலையாய் நிறுத்தினீர் - ஆஹா

எச்சரிப்பின் சத்தத்தை தள்ளிவிட்ட போதிலும்
அன்பின் சவுக்கடியால் சேர்த்தன்பாய் ஆதரித்தீர் - ஆஹா

காரிருள் சூழு வேளை - கலங்கித் தவிக்கையில்
காத்து நீர் என்னை தேற்றி - கருத்தாய் ஆதரித்தீர் - ஆஹா

பிராண நாதா உந்தனை - என்று நான் கண்டிடுவேன்
ஆருயிர் நேசா உம்மை என்றும் காண ஆசை பொங்குதே - ஆஹா

அழைப்பின் சத்தம் கேட்க - நாட்கள் அதிகமாமோ
நேசர் மார்பில் சாய்ந்திட - வாஞ்சை பெருகிடுதே - ஆஹா

ஆகாய மேகந்தனில் - சேர்த்திடும் நேரமதில்
ஆனந்தம் ஆனந்தமே - என்றென்றும் ஆனந்தமே - ஆஹா