Skip to main content

ஆனந்த துதி ஒலி கேட்கும் ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும்


ஆனந்த துதி ஒலி கேட்கும்
ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும்
ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும்
ஆண்டவர் வாக்கு பலிக்கும் -ஆ...ஆ...

மகிமைப் படுத்துவே னென்றாரே
மகிபனின் பாசம் பெரிதே
மங்காத புகழுடன் வாழ்வோம்
மாட்சி பெற்று உயர்ந்திடு வோமே
குறுகிட மாட்டோம் குன்றிடமாட்டோம்
குறையில்லா தேவனின் வாக்கு - ஆ...ஆ...

ஆதிநிலை ஏகிடுவோமே
ஆசீர் திரும்பப் பெறுவோமே
பாழான மண் மேடுகள் யாவும்
பாராளும் வேந்தன் மனையாகும்
சிறைவாழ்வு மறையும் சீர் வாழ்வு மலரும்
சீயோனின் மகிமை திரும்பும் - ஆ...ஆ...

யாக்கோபு நடுங்கிடுவானோ
யாக்கோபின் தேவன் துணையே
அமரிக்கை வாழ்வை அழைப்போம்
ஆண்டவர் மார்பில் சுகிப்போம்
பதறாத வாழ்வும் சிதறாத மனமும்
பரிசாக தேவன் அருள்வார் - ஆ...ஆ...

ஆறாத காயங்கள் ஆறும்
ஆரோக்கியம் வாழ்வினில் மூடும்
ஆற்றியே தேற்றும் நல்நாதர்
போற்றியே பாதம் தரிப்போம்
அனாதி தேவன் அடைக்கலம் பாரில்
அனாதையாவதே இல்லை - ஆ...ஆ...

பார்போற்றும் தேவன் நம் தேவன்
பாரினில் வேறில்லை பாக்கியம்
நீர் எந்தன் ஜனங்கள் என்றாரே
வேறென்ன வாழ்வினில் வேண்டும்
பிள்ளைகளும் சபையும் பிதாமுன்னே நிலைக்கும்
பரிசுத்தர்மாளிகை எழும்பும் - ஆ...ஆ...