Skip to main content

ஆபிரகாம் தேவன் ஈசாக்கின் தேவன் யாக்கோபின் தேவனவர் - என்னை


ஆபிரகாம் தேவன் ஈசாக்கின் தேவன்
யாக்கோபின் தேவனவர் - என்னை
அழைத்தும் உன்னத வழியில்
என்றென்றும் நடத்திடுவார்

வனாந்திரமோ வாடாதே மனமே
காடையை அனுப்பிடுவார்
தண்ணீர் இல்லையோ - எண்ணிப்பார்
அவரின் நன்மைகள் எத்தனையோ - ஆபிரகாம்

சோதனை வேளையோ சோராதே மனதே
இயேசுவை சார்ந்திடுவாய்
யோர்தானைக் கடந்து - இயேசுவைப் பற்றிக் கொள்
என்றென்றும் ஜீவிப்பாய் - ஆபிரகாம்

அல்லேலூயா பாடி இயேசுவைத் துதித்து
அனுதினம் ஜீவிப்பாயே
அவரின் சித்தம் நித்தமும் செய்ய
ஆவலாய் கீழ்ப் படிவாய் - ஆபிரகாம்