சிங்கார மாளிகையில் ஜெயகீதங்கள் சீயோன் மணவாளனுடன்
சீயோன் மணவாளனுடன்
ஆனந்தம் பாடி அன்பரை சேர்ந்து
ஆறுதலடைந்திடுவோம் - அங்கே
அலங்கார மகிமையின் கிரீடங்கள் சூடி
அன்பரில் மகிழ்ந்திடுவோம் - சிங்கார
துயரப்பட்டவர் துதித்துப் பாடிடுவார்
துதியின் ஆடையுடனே - அங்கே
உயரமாய் சீயோன் உன்னதரோடு
களித்து கவி பாடுவோம் - சிங்கார
முள்முடி நமக்காய் அணிந்த மெய் இயேசுவின்
திருமுகம் கண்டிடுவோம் - அங்கே
முத்திரையிட்ட சுத்தர்கள் வெள்ளங்கி
தரித்தோராய் துதித்திடுவார் - சிங்கார
பூமியின் அரசை புதுப்பாட்டாய் பாடி
புன்னகை பூத்திடுவோம் - புது
எண்ணெயால் அபிஷேகம் பண்ணப்பட்டோராய்
மண்ணாசை ஒழித்திடுவோம் - சிங்கார
அவருரைத்த அடையாளங்களெல்லாம்
தவறாமல் நடக்கின்றதே - அவர்
வரும் வேளை அறியாதிருப்பதால் எப்போதும்
ஆயத்தமாயிருப்போம் - சிங்கார