Skip to main content

சீயோன் மணவாளன் நேசர் இயேசு ராஜன்


சீயோன் மணவாளன்
நேசர் இயேசு ராஜன்
தூய மணாளிக்காய்
மேகங்கள் மேல வருவார்
வானில் ஆனந்தமாய்
எக்காளம் தொனிக்கவே
பாரில் ஜெயமாக
ஜீவித்தோர் ஏகிடுவார்

ஆவியின் கண்களால்
அன்பரை மாத்திரமே
தரிசித்து நேசித்தோர்
மேகத்தில் சேர்ந்திடுவார் - வானில்

மான் போல வாஞ்சையாய்
தாகமாய் சேவைக்காய்
தியாகமாய் ஜீவனை
ஈந்தவர் பறந்திடுவார் - வானில்

ஜெபத்திலே விழிப்பாய்
அகத்திலே களிப்பாய்
ஏகுவோம் எதிர்கொண்டு
ஏகனோடே இசைய - வானில்

பாடுவோம் ஜெய கீதம்
ஆளுவோம் என்றென்றும்
ஆனந்தம் ஆனந்தம்
சீயோனில் ஆனந்தம் - வானில்