சிந்தியுங்கள் கிருபைகளை பாரங்களை அவர் மேல் வைப்போம்
பாரங்களை அவர் மேல் வைப்போம்
நன்மையாக அவர் மாற்றிடுவார்
இயேசு என்றும் நம்மோடு உண்டு
சொந்த உயிரை தந்தவரே
திக்கற்றவர்களாய் விடவாரோ
வாசஸ்தலங்கள் ஆயத்தமே
இயேசு வருவார் சேர்ந்திடுவோம்
உள்ளம் கலங்கி தம் அருகே
செல்லும் வேளையில் ஆறுதல் தருவார்
கண்ணீர் துடைத்திடுவார்
ஆத்தும பெலன் தருவார் - சிந்தி
மரணப் படுக்கை மாற்றி விரிக்கும்
மாநாதர் இயேசு மரணத்தை வென்றவர்
அற்புதர் மருத்துவரே
வஸ்திரத்தின் தொங்கலைடத்தொடு - சிந்தி
நாளையை எண்ணி வாடுவதேன்
காட்டுப் புஷ்பங்களை கவனித்துப்பார்
உன்னை போஷித்திட
இயேசு போதுமானவர் - சிந்தி