சீஷராகுவோம் சீஷராக்கிடுவோம் ஞிலுவை கொடியை ஏந்திக் கொண்டு
ஞிலுவை கொடியை ஏந்திக் கொண்டு
சீஷராக்கி முன்னேறி செல்வோம்
ஆதி விஸ்வாசம் என்றுமே பொங்கிடவே
ஆண்டவர் அன்பு என்றுமே தங்கிடவே
சுத்த ஜீவியம் நற்சாட்சி பெற்று
சத்திய வழியில் சீஷராக்குவோம்
கனிதரும் வாழ்வு நிலை நிற்கும் அன்பினாலும்
ஒருவரிலொருவர் அன்பராயிருப்பதாலும்
சீஷர் இவர்கள் என்று அறியப்பட்டு
உபதேச பாதையில் சீஷராக்குவோம்
வானிலும் பூவிலும் சகலதிகாரமுமே
இயேசுவின் நாமத்தில் என்றென்றும் நம் சொந்தமே
புறப்படுவீர் அவர் நாமத்தில்
பரிசுத்த பாதையில் சீஷராக்குவோம்
நானில முழுவதும் நரகத்தின் பாதையிலே
நம்பிக்கையில்லா கல்லறை நாடி செல்வோர்
ஆயிரம் ஆயிரம் அழிகின்றாரே
இயேசுவின் நாமத்தில் சீஷராக்குவோம்