Skip to main content

சர்வ வல்லவர் என் சொந்தமானார் சாவை வென்றவர் என் ஜீவனானார்


சர்வ வல்லவர் என் சொந்தமானார்
சாவை வென்றவர் என் ஜீவனானார்
ஆ... இது அதிசயம் தானே
ஓ... இது உண்மைதானே

கண்டு கொண்டேன் ஒரு புதையல்
பெற்றுக் கொண்டேன் ஒரு பொக்கிஷம்
இயேசுதான் என் இரட்சகர்
இயேசுதான் என் இராஜா

சந்தோஷமும் சமாதானமும்
என் உள்ளத்தில் பொங்குதம்மா
பாவ மெல்லாம் போக்கிவிட்டார்
பயங்களெல்லாம் நீக்கிவிட்டார்

பரலோகத்தில் எனது பெயர்
எழுதிவிட்டார் என் இயேசு
என் வாழ்வின் நோக்கமெல்லாம்
இயேசுவுக்காய் வாழ்வது தான்

ஊரெல்லாம் சொல்லிடுவேன்
உலகெங்கும் பறைசாற்றுவேன்
ஜீவிக்கிறார் என் இயேசு
சீக்கிரமாய் வந்திடுவார்