சர்வ வல்ல நம் இயேசு தேவனையே துதிபாடி போற்றி மகிழ்வோம்
துதிபாடி போற்றி மகிழ்வோம்
அவர் கிருபை இதுவரையிலும்
அணைத்துன்பாய் நடத்தியே
உலகோர் பாவங்கள் பாரக்
குருசில் தீர்த்திட
பலியாய் முற்றும் ஈந்தார் தம்மை
பேரன்பர் இயேசுவின் பாதை சென்றிடுவோம் - சர்வ வல்ல
தினமும் துதித்திட - தூய
வழியில் நடந்திட
மாநில மீதில் கானக வழியில்
மாறிடா இயேசுவே பாதை காட்டிடுவார் - சர்வ வல்ல
துன்பம் தொல்லைகள் - பினி
நோய்கள் சூழினும்
அண்ணல் இயேசு அருகில் வந்து
அன்பின் கரம் தாங்கி ஆறுதலளிப்பார் - சர்வ வல்ல
வாழ்க்கைப் படகினில் - அலை
மோதி அடிக்கையில்
புயல் நீக்கி அமைதி அளிப்பார்
தஞ்சம் ஈந்துதவும் நல் தாரகமுமாவார் - சர்வ வல்ல
சீயோன் மலைமீதே - நிற்கும்
நேசர் இயேசுவின்
திருமுகமதை சேவிப்போம் நாம்
திரசித்தம் செய்தென்றும் அவரில் மகிழுவோம் - சர்வ வல்ல