சிலுவை சுமந்த உருவம் சிந்தின இரத்தம் புரண்டோடியே
சிந்தின இரத்தம் புரண்டோடியே
நதி போலவே பாய்கின்றதே
நம்பி இயேசுவண்டை வா - 2
பொல்லா உலக சிற்றின்பங்கள்
எல்லாம் அழியும் மாயை
காணாய் நிலையான சந்தோஷம் பூவில்
கர்த்தாவின் அன்பண்டை வா - சிலுவை
ஆத்தும மீட்மைப் பெற்றிடாமல்
ஆத்மம் நஷ்டமடைந்தால்
லோகம் முழுவதும் ஆதாயமாக்கியும்
லாபம் ஒன்றுமில்லையே - சிலுவை
பாவ மனித ஜாதிகளைப்
பாசமாய் மீட்க வந்தார்
பாவப் பரிகாரி கர்த்தர் இயேசு நாதர்
பாவம் எல்லாம் சுமந்தார் - சிலுவை
நித்திய ஜீவன் வாஞ்சிப்பாயோ
நித்திய மோட்ச வாழ்வில்
தேடி வாராயோ பரிசுத்த ஜீவியம்
தேவை அதை அடைவாய் - சிலுவை
தாகமடைந்தோர் எல்லாருமே
தாகத்தைத் தீர்க்க வாரும்
ஜீவத் தண்ணீரான கர்த்தர் இயேசு நாதர்
ஜீவன் உனக்களிப்பார் - சிலுவை