Skip to main content

சேனைகளின் தேவன் நம்மோடு இருக்கின்றார் நல்லவர் அவர் வல்லவர், அடைக்கலமானவர்


சேனைகளின் தேவன் நம்மோடு இருக்கின்றார்
நல்லவர் அவர் வல்லவர், அடைக்கலமானவர்

எரிகோ போன்ற சோதனைகள்
எதிரிட்டு வந்தாலும்
தகர்த்திடுவார், நொறுக்கிடுவார்
ஜெயத்தைத் தந்திடுவார் - சேனை

சேனைகளின் கர்த்தரை நம்பிடுவோம்
பாக்கியம் அடைந்திடுவோம்
உயர்த்திடுவார், தாங்கிடுவார்
நன்மையால் நிரப்பிடுவார் - சேனை

ஆவியின் வரத்தை தந்திடுவார்
ஆவியை பொழிந்திடுவார்
ஏகிடுவாய் எழும்பிடுவாய்
சீயோனில் சேர்ந்திடுவாய் - சேனை

சபையோரே நாம் எழும்பிடுவோம்
வசனத்தைப் பிடித்திடுவோம்
வென்றிடுவோம், சென்றிடுவோம்
ஊழியம் செய்திடுவோம் - சேனை