Skip to main content

சத்தியமும் ஜீவனுமாய் நித்தமுமே வாழ்ந்திடும் கர்த்தனே எங்கட்கு கரம் தந்து என்றும் தாங்கிடும்


சத்தியமும் ஜீவனுமாய் நித்தமுமே வாழ்ந்திடும்
கர்த்தனே எங்கட்கு கரம் தந்து என்றும் தாங்கிடும்
சுத்தமாய் நடப்பதற்கும் சுத்த ஆவி தந்திடும்
சித்தமோடு இந்த வேளை வந்திறங்கிடும்
வானந்திறந்தருளும் பல தானங்களையிந் நேரமதில்
வானவனே ஞானமுள்ள வல்ல குரநாதனே
தேனிலும் மதுரம் திவ்ய ஆசீர்வாதங்கள்

என்னை முற்றும் மாற்றிட உன்னத பெலனூற்றிடும்
இன்னும் இன்னும் ஈசனேயும் நல்வரங்கள் ஈந்திடும்
கண்ணிகளிற் சிக்கிடாமற் கண்மணி போல் காத்திடும்
கன்மலையும் மீட்பருமென் காவலும் நீரே - வானந்

சுய ஆடம்பரம் முற்றும் சுட்டெரிக்க வேணுமே
தயவு தாழ்மையினாவி தந்தருள வேணுமே
மாயமான யாவினின்றும் மனமதைப் பேணுமே
ஆயனே அடியார்களின் அடைக்கலமே - வானந்

அதிகமதிக அன்பில் அமிழ்ந்து அனுதினம்
புதிய நாவுகளாலும் புகழ்ந்தும்மைப் போற்றிட
அதிசயமே அகத்தின் குறைகளகற்றியே
இது சமயமுன்னத பெலனீந்திடும் - வானந்