Skip to main content

செலவிடு உன் சம்பத்தெல்லாம் சுவிசேஷத்திற்காய் - என்றும்


செலவிடு உன் சம்பத்தெல்லாம்
சுவிசேஷத்திற்காய் - என்றும்
செவிடு உன் தாலந்தெல்லாம் ஏசு கிறிஸ்துவுக்காய்

இவ்வுலக ஆஸ்தி உந்தன் ஜீவனே அல்ல
அவ்வுலக ஆஸ்தி அழியா ஆத்துமாக்களே - என்றும்

உந்தன் ஜீவன் புல்லுக்கு ஒப்பாயிருக்கின்றது
உண்மையாக நாளை உன்னுடைய நாளல்ல - என்றும்

உலகத்தினின்று நீ ஒன்றும் கொண்டு போவதில்லை
உண்ணவும் உடுக்கவும் உண்டானால் அது போதும் - என்றும்

பண ஆசை தீமையின் வேராயிருக்கின்றது
பலவித இச்சைக்கும் நேராக இழுக்கின்றது - என்றும்

ஜீவனை வெறுத்துவிடு ஜீவனடைவாய்
ஜீவனுக்கீடாய் ஜனங்களைத் தேவன் தருவார் - என்றும்