சீயோனிலே என் திட அஸ்திபாரம் கிறிஸ்துவே அவர் நான் என்றும் நம்பும் கன்மலை
நான் என்றும் நம்பும் கன்மலை
கலங்கிடுவேனோ பதறிடுவேனோ
கர்த்தரில் விசுவாசம் இருக்கையிலே
அசையா என் நம்பிக்கை நங்கூரமே
இயேசுவில் மாத்திரமே - சீயோனிலே
புயலடித்தாலும் அலை மோதினாலும்
எவர் எனக்கெதிராய் எழும்பினாலும்
எனக்கு எட்டாத உயரத்திலே
எடுத்தவர் நிறுத்திடுவார் - சீயோனிலே
வியாதியானாலே காயம் வருந்தி
வாடியே மரண நிழல் சூழினும்
விசுவாசத்தின் கரத்தாலவர்
வாக்கை நான் பற்றிடுவேந் - சீயோனிலே
மா பரிசுத்த விசுவாசத்தாலே
மா பரிசுத்த ஸ்தலம் ஏகிடவே
திரை வழியாய் தம் சரீரதினால்
திறந்தாரே தூய வழி - சீயோனிலே
நான் விசுவாசிப்போர் இன்னா ரென்றறிவேன்
என்னையே படைத்திட்டேன் அவர் கரத்தில்
முடிவு வரை என்னை நடத்திடுவார்
முற்றுமாய் இரட்சிப்பாரே - சீயோனிலே