Skip to main content

ஆத்தும நேசர் இயேசுவே, ஆதி அந்தமும் நீரே ஆவியின் ஆசீர்வாதம் வந்திறங்கவே


ஆத்தும நேசர் இயேசுவே, ஆதி அந்தமும் நீரே
ஆவியின் ஆசீர்வாதம் வந்திறங்கவே
மணமக்கள் மீதிலே மரியாய்ப் பொழியுமே
மங்களம் மங்களம் இன்றும் என்றும்
எங்கள் மணாளனாம் இயேசுவிற்கே
மங்களம் என்று நாம் ஆர்ப்பரித்துமே
இன்பமாம் கீத வாத்தியங்களோடே
இங்கிதமாய் பாடியே மகிழுவோம்

இந்த நல் விசுவாசத்தின் இன்ப தம்பதிகள் மேல்
உந்தனின் அன்புகரம் நீட்டிடும் தேவா
உந்தன் சித்தம் செய்துமே இன்ப நாடு செல்லவே
உன்னத ஈவுகள் தந்தருளுமே - எங்கள்

இன்ப துன்ப வேளையும் வாழ்வினிலும் தாழ்வினிலும்
இயேசுவே உந்தன் அன்பில் நிலைத்தோங்கியே
இணைபிரியாமல் இம்மணமக்கள் வாழவே
ஈசனே எண்ணில்லா ஆசியருளுமே - எங்கள்

கர்த்தனே கறைதிரை முற்றிலும் அகற்றியே
கற்புள்ள கள்னிகையைச் சேர்க்கும் நாளிலே
உந்தன் மணவாட்டியாய் இந்த மணமக்களும்
உம்முடன் வாழ்ந்திடும் பாக்கியம் ஈயுமே - எங்கள்