சகலத்தையும் புதிதாக்கும் புதிய காரியம் செய்திடுவார்
புதிய காரியம் செய்திடுவார்
புதுமை தோன்றிடும் இந்நாளே
கானக பாதையில் அற்புதமாய்
கரம்பிடித்து வழி நடத்திடுவார்
பாலைவனத்தில் ஆறுகளை
பாய்ந்திட செய்திடுவார்
பூரண நிறைவைஅகமதிலே
பரமனே அளித்திடுவார் - புதிய
பாவங்கள் யாவையும் உணர்த்தியவர்
பரிசுத்தம் அடைய செய்வார்
புதிய இதயம் அளித்திடுவார்
புது வாழ்வு அடைந்திடுவோம் - புதிய
பரிசுத்த பாதையில் முன் செல்லவே
பழையவை களைந்திடுவோம்
புதிய சாயல் அடைந்திடுவோம்
ஆவி ஈந்திடுவார் - புதிய
கிறிஸ்துவின் சிந்தை அடைந்திடவே
கிருபையில் வளர்ந்திடுவோம்
புதிய கிருபை அருளிச் செய்வார்
புதுப்பெலன் அடைந்திடுவோம் - புதிய
கர்த்தரின் பாதம் அமர்ந்தேஅ நாம்
கழுகு போல் எழும்பிடுவோம்
புதிய வல்லமை அளித்திடுவார்
ஜெயம் பெற்று ஏகிடுவோம் - புதிய