சவாலை சந்திக்க புறப்படு நீ தாமதமினியேன் தருணமிதே
சவாலை சந்திக்க புறப்படு நீ
தாமதமினியேன் தருணமிதே
அறுவடை இன்ற மிகுதியோ
அறிந்தே வாராய் சேவை செய்ய
திறப்பில் நிற்க ஒரு தியாகி தேவை
இறப்பின் எண்ணிக்கை பெருகிடுதே
இழந்த ஆத்துமாவின் பொறுப்பை
உந்தன் கையில் கேட்பாரே - சவாலை
புதைந்த விதை தன் பலனைத் தரும்
மறைந்த ஜீவியம் கனி கொடுக்கும்
கிறிஸ்து முன்னே உலகம் பின்னே
என்ற எண்ணம் உன்னிலுண்டோ - சவாலை
கடந்த நாட்கள் வீணானதே
கணக்குக் கொடுக்கும் நேரமிதே
இருக்கும் நாட்களோ பொன்னானதே
இயேசுவுக்காக நீ இலாபமாக்கு - சவாலை
உடைந்த உள்ளம் விரும்பும் கர்த்தர்
நொறுங்கும் ஆவியை பலியாய் ஏற்பார்
ஆத்ம பாரம் கொண்ட நெஞ்சம்
ஆண்டவர் இயேசுவின் இருப்பிடமே - சவாலை