Skip to main content

வந்தேன் ஐயா உம் பாதமதில் தந்தேன் என்னை உம் அன்புக்காய்


வந்தேன் ஐயா உம் பாதமதில்
தந்தேன் என்னை உம் அன்புக்காய்

கர்த்தர் நீர் செய்த நன்மைகட்காய்
காலமெல்லாம் உம்மை போற்றிடுவேன்
ஆயிரம் நாவுகள் போதாதே
ஆடிமை நானும் உமக்கையா - வந்தேன்

கலங்கி தவிக்கும் நேரங்களில்
கண்ணீரைத் துடைத்து தேற்றினீரே
சுமந்தீரே தோளின் மேல் பத்திரமாய்
சுகமான செட்டையில் காத்தீரே - வந்தேன்

எந்தன் ஆவி ஆத்மா சரீரமே
எந்தன் சுகம் பெலன் யாவுமே
பூவிலே உம் சேவை செய்யவே
பூரணமாக ஒப்படைக்கிறேன் - வந்தேன்

உம் சித்தம் என்றும் செய்திடவே
உன்னத ஆவியால் நிரப்புமே
முற்றுமாய் பலியாக படைக்கிறேன்
முடிவு வரை நாதா நடத்துமே - வந்தேன்

ஒப்புவித்தேனே என்னையுமே
முற்றும் பரிசுத்தமாக்கிடவே
நேசர் உம் வருகை நாளிலே
மாசற்றோனாய் என்னை நீர் காணவே - வந்தேன்