Skip to main content

வல்லமை தேவா வந்திறங்க உந்தனின் பாதமே பணிவோம்


வல்லமை தேவா வந்திறங்க
உந்தனின் பாதமே பணிவோம்
வேண்டி நிற்கும் எங்கள் மீதே
வல்ல உம் ஆவியை பொழிவீர்

தாகமே தீர்த்திட தேவனே வாரும்
தாசர்கள் மத்தியிலே
கருணை கரத்தால் அபிஷேகிப்பீர்
பரிசுத்த ஆவியில் மகிழ்வோம் - வல்லமை

ஊற்றிடும் தேவனே உன்னத ஆவி
உள்ளமே ஆனந்திக்கும்
கிருபை தயவால் இறங்கிடுமே
மகிமையின் ஆவியில் மகிழ்வோம் - வல்லமை

அற்புத வல்லமை ஆவியில் தாரும்
ஆவலுடன் ஜெபிக்க
கறைகள் திரைகள் கழுவிடுமே
கிறிஸ்துவின் ஆவியில் மகிழ்வோம் - வல்லமை

கற்களும் முட்களும் நிறைந்த இப்பாரில்
சீயோன் வித்தை விதைத்து
ஏற்ற விதமாய் பலன் கொடுக்க
ஆவியின் மாரியால் நிறைப்பீர் - வல்லமை